spt...

119
1 SPT Aninturai பேராசிரய.சே.திணே, சிக பதசிய ேகலை கழக, சிக . க. த. ம. இபா ‘‘அனை’’ 9-10-1984 இைகிய தா ஈறெத ஏெமிக கழலதபய கவிலத, பதாெதா றதாலமயானபத ோ. ‘‘உளத உளத கவிலத, இே உரறவேத கவிலத, றதள றதளித தமிழி உலம றதரத உலரேத கவில’’. இததா கவிமணி பதசிகவிநாயக கா கவிலத இைகண . உணசி, கேலன, வடவ உணத உலம என நாக கவிலத கடடலத தாகி நிகவிமிக க. உளலத இபறதவத ேேதவத ஆெ மிக கவிலத நமகளிஅர ேயக, இதலகய கவிலதகலள கள கேடமெ றவலள உள றகாட இளசிொக ேசமத டகளாக ோட களிகபோத றகாலள இே றேறகிென. எனபவதா இளசிொகளக ஏெ இதலகய ோடக கழலத இைகியதி இெியலமயாத ொக கரதேகிென. இவலெ கழலத ோடக எோக. கழலதகலள ேெிய ோடக ேை ேழதமி இைகியதி உ. ஆனா கழலதேடேதகரய ோடகலள யாதவ ஔலவயா. ஆதிட, றகாலெ பவத, யதலர, நவழி மதைிய அவத ோடக அலனத அெ கரதகலளபய மிகதியாஉணதகிென. இனொட ோரதியா கழலத ோட இைகியதிக த ோோ ோடக யை வழிகாடனா. அவ வழிகாடய ஒளி விளகி நிற கவிமணி கழலத உளதட ேை டகலள இயெினா. ி கழலத கவிஞ, அழ. வளியோ இத இைகிய தலெயி இற ேீ நலட போகிொ.

Upload: others

Post on 21-Jan-2020

5 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1

    SPT Aninturai

    பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

    க. து. மு. இக்பால் ‘‘அன்னை’’ 9-10-1984

    இைக்கியத் தாய் ஈன்றெடுத்த ஏற்ெமிகு குழந்லதபய கவிலத, பதாற்ெத்தால் றதான்லமயானபத ோட்டு. ‘‘உள்ளத்து உள்ளது கவிலத, இன்ே உருறவடுப்ேது கவிலத, றதள்ளத் றதளிந்த தமிழில் உண்லம றதரிந்து உலரப்ேது கவிலத’’. இதுதான் கவிமணி பதசிகவிநாயகர் காட்டும் கவிலத இைக்கணம் . உணர்ச்சி, கற்ேலன, வடிவம் உணர்த்தும் உண்லம என்னும் நான்கும் கவிலதக் கட்டிடத்லதத் தாங்கி நிற்கும் கவின்மிகு தூண்கள். உள்ளத்லத இன்புறுத்துவதும் ேண்ேடுத்துவதும் ஆற்ெல் மிக்க கவிலத நமக்களிக்கும் அரும் ேயன்கள், இத்தலகய கவிலதகலளக் கள்ளங் கேடமற்ெ றவள்லள உள்ளம் றகாண்ட இளஞ்சிொர்கள் ேண்சுமந்த ோடல்களாகப் ோடிக் களிக்கும்போது றகாள்லள இன்ேம் றேறுகின்ெனர். எனபவதான் இளஞ்சிொர்களுக்கு ஏற்ெ இத்தலகய ோடல்கள் குழந்லத இைக்கியத்தின் இன்ெியலமயாத கூொகக் கருதப்ேடுகின்ென. இவற்லெக் குழந்லதப் ோடல்கள் என்ோர்கள்.

    குழந்லதகலளப் ேற்ெிய ோடல்கள் ேை ேழந்தமிழ் இைக்கியத்தில் உண்டு. ஆனால் குழந்லதகள் ேடிப்ேதற்குரிய ோடல்கலள யாத்தவர் ஔலவயார். ஆத்திசூடி, றகான்லெ பவந்தன், மூதுலர, நல்வழி முதைிய அவர்தம் ோடல்கள் அலனத்தும் அெக் கருத்துக்கலளபய மிகுதியாக உணர்த்துகின்ென. இந்நூற்ொண்டில் ோரதியார் குழந்லதப் ோடல் இைக்கியத்திற்குத் தம் ோப்ோப் ோடல்கள் மூைம் வழிகாட்டினார். அவர் வழிகாட்டிய ஒளி விளக்கில் நின்று கவிமணி குழந்லத உள்ளத்துடன் ேை ோடல்கலள இயற்ெினார். ேின் குழந்லதக் கவிஞர், அழ. வள்ளியப்ோ இந்த இைக்கியத் துலெயில் இன்று ேடீு நலட போடுகின்ொர்.

  • 2

    இவர்கள் வரிலசயில் சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் க.து.மு. இக்ோல் இளங் குழந்லதகள் ோடிப் ேழகுவதற்கு ஏற்ெ வலகயில் தாம் இயற்ெிய அழகுத் தமிழ்ப் ோடல்கள் அடங்கிய றதாகுப்பு ஒன்லெ, ‘‘அன்லன’’ ன்னும் றேயரில் இப்போது றவளியிடுகிொர். நண்ேர் இக்ோல் சிங்கப்பூரில் உள்ள றசந்தமிழ்க் கவிஞர்களில் சிெந்தவர். கற்ேலன வளமும் கவி ோடும் உள்ளமும் கன்னித் தமிழ்ப் ேற்றும் ஒருங்பக றேற்ெவர். எளிய தமிழில் இனிய முலெயில் றதளிவாகப் ோடும் இயல்ேினர். இவர் சிங்கப்பூர்ச் சூழலை ஒட்டிக் குழந்லதகளுக்காகப் ோடிய ோடல்கள் ேை சிங்கப்பூர் வாறனாைியில் ‘‘ோடிப் ேழகுபவாம்’’ என்னும் நிகழ்ச்சியில் ஒைிேரப்ோயின. அவற்றுள் சிைவற்லெத் பதர்ந்றதடுத்து இந்த ‘‘அன்லன’’ என்னும் றதாகுப்ேில் அளித்துள்ளார். இத்றதாகுப்ேில் உள்ள கவிலதகள் இளங்குழந்லதகளுக்கு அெிமுகமான ேை றோருட்கலளப் ேற்ெியலவ. ஊசி முதல் இயந்திர மனிதன் வலர, எறும்பு முதல் எழில் அருவி வலர ேைவற்லெ உள்ளடக்கியலவ. எங்கும் நிலெந்தவலன என்னும் முதற் ோடல் இலெ உண்லமலய எடுத்துக் காட்டுகின்ெது. சிங்கப்பூர் , நமது றகாடி என்ேன நாட்டுப்ேற்லெ ஊட்டுகின்ென. அன்லன, ோட்டி, தங்லக, ேிள்லளச் றசல்வம் என்ேன குடும்ேப் ேிலணப்ேிலன வளர்க்க உதவுகின்ென. எறும்பு, பசவல், கிளி, காகம், பதன்கூடுு், நானிைம், மின்னல், கடற்கலர, அருவி, பவர்கள்., இடி, மலழ என்ேன இயற்லக இன்ேத்தில் ஈடுேடச் றசய்கின்ென. கலத இைக்கணம் றசால்கிெது. கண்ணன் எெிந்த கல் அதற்கு இைக்கியம் ஆகிெது. எதிர்காைத்தில் குழந்லதகலள மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் ஆகுமாறு தூண்டுவன சிை. றதாழிைாளியும் கூட்டுெவும் நாட்டு வளம் காட்ட வருகின்ென. காைணி, உடல்நைம் பேணச் றசால்கிெது. தலை என்னும் கவிலத எண்சாண் உடம்புக்கு தலை இன்ெியலமயாத உறுப்ோவது ஏன்?என்ேதற்கு விலட தருகின்ெது. வாலழப்ேழமும் டுரியானும் மண்ணின் வளங்காட்டிப் ேழச்சுலவலய ஊட்டுகின்ென. ேடி, உச்சரிப்பு, கடிதம், கணிதம் ேயில்பவாம், றதரிந்து றகாள் என்ேன கல்வி றதாடர்ோனலவ. அழகு தரும் இன்றமாழி நிலனவில் நிறுத்து, ஆலச என்ேன ஒழுக்கம், ஊட்டுதற்கு என எழுந்தலவ. முயற்சி பவண்டும் என பவண்டுபகாள் விடுக்கும் நிலையில்

  • 3

    அயற்சி நீக்கத் தூக்கமும் அளவுடன் பதலவ என்னும் கனிவுக் கட்டலளயம் இடம் றேறுகிெது. உருவம் ோர்த்து என்னும் கவிலத ‘உருவு கண்டு எள்ளாலம பவண்டும்’ என்னும் வள்ளுவரின் கருத்லத நிலனவுறுத்த வருகிெது. மணிப்றோெி காட்டிக் காகிதப் பூப்போல் வாழாமல், காற்றுள்ள போபத தூற்ெிக்றகாள் என விடுக்கும் எச்சரிக்லகயும் இங்பக உண்டு. இவர் ோடல்கள் ‘‘றசவி நுகர் கனிகள்’’ எனக் கூறுகிெது. காது - சிந்லதக்கு விருந்து என்று றசப்புகிெது நம் உள்ளம். இறுதியில் உள்ள கவலை பவண்டாம் என்னும் கவிலத இளம் குழந்லதகலள பநாு்க்கி, ‘‘இன்ேபம எந்நாளும் துன்ேம் இல்லை’’ என்று நம்ேிக்லக ஒளி நல்குகிெது. இவ்வாறு இளங் குழந்லதகளுக்குப் ேழக்கமான றோருள்கலளப் ோடி இன்புறுத்திப் ேிஞ்சு உள்ளங்களில் ேண்ோட்லட விலதக்கும் இவர் ோடற் ோங்கு ோராட்டுதற்குரியது.

    ‘‘எறும்பே நீ ஓர் அதிசயபம! இலெவன் அெிந்த அதிசயபம! இரவில் உெக்கம் றகாள்வாபயா, என்னிடம் அதலனச் றசால்வாபயா?’’ என எறும்லே வினவுவதும், ‘‘விழுந்த ேல்லைத் பதடிபயா வதீி எல்ைாம் நடக்கிொய்? , இழந்த ேருவம் தன்லனபயா எங்கும் பதடி அலைகிொய் ’’ எனப் ோட்டிலயக் பகட்கும் வினாவும் இக்ோைின் கற்ேலனக்கு எடுத்துக் காட்டுகளாக இைங்குகின்ென. ‘‘இருண்ட வான வதீியிபை எரியும் மத்தாப்பு! அது இடியடன் கைந்பத பமகத்தாய் றசாரியும் மின்னல் பூ’’ இது இவர்தம் கவிலத வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. ேடி, காது என்னும் கவிலதகள் றசால் விலளயாட்லடச் றசப்புகின்ென. காைணி, ஊசி, இயந்திர மனிதர் என்ேன புதுக் கண்பணாட்டப் போக்கிற்குச் சான்றுகள். அழகு தரும் தங்லக உவலமத் திெத்திற்குச் சான்ொக ஆடுகிொள். இளஞ்சிொர்களுக்கு ஏற்ெ எளிய தமிழ் நலட, அரிய கருத்துக்கள், புதிய சிந்தலனகள். சுருக்கமாகச் றசால்ைப் போனால் இத் றதாகுப்ேில் உள்ள இக்ோைின் ோடல்கள் எளிலமயிை வாலழப்ேழம்., சுலவயில் டுரியன், தமிழ் மணத்தில் தங்கநிெ மல்பகாவா மாம்ேழம், , கருத்தாழத்தில் கவின்மிகு ேைாச்சுலள,

    இத்தலகய ோடல்கள் அடங்கிய றதாகுப்பு நூல் ஒன்லெ றவளியிட்டதால் நண்ேர் இக்ோல் உண்லமயில் நம் சிொர்களுக்கு ஓர் நற்ெமிழ் அன்லனயாக விளங்குகிொர். தமிழ்ப் ோல் நிலனந்தூட்டும்

  • 4

    தாயாகிய கவிஞர் இக்ோலுக்கு என் ோராட்டுக்கள். இவர் தம் தமிழ்த்றதாண்டு இன்னும் சிெக்க வாழ்த்துகிபென். சிங்கப்பூர் தமிழ் சிொர்களும் றசந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரும் இந்நூலை வாங்கிப் ேடித்து இன்புறுதல் பவண்டும். இதன்வழி இதயம் ேண்ேடுதல் பவண்டும் என்ேபத என் பவண்டுபகாள்.

    பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

    பரணன் மனை 2-3-1984

    தமிழ்க் கடைில் முகந்றதடுத்துக் கவிஞர் ேரணன் என்னும் கருபமகம் றோழிந்த கவிலத ‘மலழ’லயக் கண்ணுற்பென். மலழயில் நலனந்பதன் மகிழ்ச்சி றகாண்படன். இம் மலழ நீர் இளஞ்சிொர்களின் உள்ளமாகிய வயைிற் ோய்ந்பதாடி அெிவுப்ேயிலர வளர்க்கின்ெது. அெறநெியாகிய ேயலன நல்குகின்ெது. இம் மலழ நீரின் இயல்லே இங்பக சிெிது காண்போம். முதைிலுள்ள ‘தமிழ்’ றமாழியுணர்லவத் தூண்டும், அடுத்து வரும் ‘சிங்லகத்தாய்’ ‘சிங்கப்பூர் , நாட்டுக்றகாடி , என்ேன நாட்டுப்ேற்லெ அளிக்கும். அடுக்குவடீு , அலெ, வாறனாைி , றதாலைபேசி, விளக்கு, கடிகாரம், நாள்காட்டி என்ேன வடீ்டுப்றேருலம விளம்பும். ‘குழந்லத, அம்மா, லகவசீல், லகதட்டல், நல்ை தம்ேி, பகாமாளி என்ேன குடும்ேப் ோசம் றகாடுக்கும்.

  • 5

    ‘ஆசிரியர், எண்கள், சீருலட, எழுதுபகால், புத்தகம் என்ேன ேள்ளிக் கல்வி ேயிற்றும். ‘வானம், சூரியன், கடல், காடு, கதிர், காலை பூக்கள், ஆைமரம் , மாம்ேழம், ஆகியலவ இயற்லக இன்ேத்தில் ஆழ்த்தும். ‘சிட்டுக்குருவி , சின்னக்குருவி , பகாழி, ேசு, எனது நாய் ஆகியலவ உயிர்களிடத்தில்அன்பு றசய்ய உலரக்கும். ‘கப்ேல், ேடகு, மிதிவண்டி , போக்குவரத்துப் ோலதக் காட்டும். ‘தமிழபவள், வள்ளுவன், ைிங்கன் என்ேன சான்பொர் றேருலம சாற்றும். பூ, ஆத்திசூடி , பவைி. றவற்ெிக் பகாப்லேகள், வாழும் றநெி, வழி, ‘ேணிவன்பு, மெவாபத , நிமிர்ந்த நன்னலட, நம்ேிக்லக , றோய் றசால்ைாபத , எண்ணம், ோடம் தம்ேிக்கு, என்ேன அெறநெி போதிக்கும். ேள்ளி இருேத்லதந்து’ ேண்ோட்டு றநெியிலனப் ேழந்தமிழ்க் குெள் வழியிற் ேகரும். இறுதியிலுள்ளது இலவயலனத்லதயும் , ‘எண்ணிச் றசயல்ேடுக’ என வைியுறுத்தும். பேசும் றமாழி, வாழும் நாடு, வசிக்கும் வடீு, இருக்கும் குடும்ேம், ேடிக்கும் ேள்ளி, ோர்க்கும் இயற்லக, ேழகும் ேெலவ , விைங்குகள், றசல்லும் ஊர்திகள்-இப்ேடி இளங்குழந்லதகளுக்கு நன்கு றதரிந்த றோருள்கலளக் கருவாகக் றகாண்டு கவிலத யாத்துள்ளார் கவிஞர் ேரணன், இவற்லெப் ோடி இன்புறும் குழந்லத எதிர்காைத்தில் வள்ளுவர்போல் இைிங்கன்போல் வரபவண்டும் என்று கருதி இவர் அெறநெிகலளயும் அரிய ேண்ோட்டு வழிகலளயும் கூெிச் சிந்தித்துச் றசயல்ேடத் தூண்டுகிொர்.

  • 6

    கவிஞர் ேரணன் ‘காட்டுக்கு பவைி மரமாகும். கவிலதக்கு பவைி மரோகும்’’ என்னும் பகாட்ோட்டில் நம்ேிக்லக உலடயவர். சிங்கப்பூரில் றசந்தமிழ்ப் ேற்றுடன் சிெந்த கவிலதகலள யாக்கும் இயல்ேினர். இவரது ோடல்கலளச் சிங்கப்பூர் வாறனாைி, றதாலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிைாகச் றசவியுற்ெிருக்கிபென். ‘தமிழ்முரசு’ இதழில் ேடித்து இன்புற்ெிருக்கிபென். இவரது கவிலதகளில் கவிலதக்குரிய உணர்ச்சி , கற்ேலன , வடிவம், உவலம நைன் றசால்ைாட்சி முதைிய கூறுகள் களிநடம்புரியக் காணைாம். ‘அன்ேின் உருபவ சிறுகுழந்லத , அழகின் நிழபை சிறு குழந்லத, இன்ேக் கலைபய சிறு குழந்லத, இனிப்ேின் வடிபவ சிறுகுழந்லத ’ இது குழந்லதக்குக் கவிஞர் றசப்பும் இைக்கணம், உணர்ச்சியின் பவகத்திற்கு இவ்வரிகள் சான்ொக உள்ளன. ‘‘மதலை வாய்றமாழி பதனாகும், மாதுலள வண்ணம் இதழாகும். புதுலமத் றதன்ெல் உடைாகும். பூவும் விழியும் உெவாகும், இப்ேகுதி கவிஞரின் உவலம நைத்துக்குக் எடுத்துக்காட்டாகும், ‘‘லவயம் என்னும் வடீிதற்குக் கூலரயானது, வாழுகின்ெ யாவருக்கும் றசாந்தமானது ’’ வானம் – நல்ை கற்ேலன . ‘‘சின்னஞ் சிெிய சிட்டு, சிெகு சீனப்ேட்டு, ‘‘அலைகள் என்னும் றதாட்டிைில் ஆடுதடா ேடகு, தண்ணரீ்க்கலைகள் என்னும் கட்டிைில் காட்டுதடா உைகு’’ சிெந்த றசால்ைாட்சி. ‘‘அன்லன றசால்லும் அன்புறமாழி, அப்ோ கூறும் அெிவு றமாழி, அண்ணன் பேசும் அழகு றமாழி, அதுதான் எங்கள் தமிழ்றமாழி’’ என்னும் வரிகள் சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்ேங்களில் என்றும் பேசும் றமாழி இன்ெமிழாக இருத்தல் பவண்டும். என்னும் கருத்லதச் றசால்ைாமற் றசால்கின்ென. அன்பும் அெிவும் அழகும் தமிழ்றமாழியின் அரிய ேண்புகள் என்ேலதயும் எடுத்துக் கூறுகின்ென. ‘மலழ ’ என்னும் இந்நூைில் உள்ள ோடல்கலளப் ேடித்துப் லேந்தமிழ்ச் சிொர்கள் ேயன்றேறுவார்கள் என நம்புகிபென். கவிஞர் ேரணனின் கவிலதத் றதாண்டு சிெக்க வாழ்த்துகிபென். பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

  • 7

    கவிஞர் இக்குவைம் கவினைக் கைிகள்

    ஆகஸ்டு 1990 (8-2-1989)

    றமாழியின் கனியாய் விளங்குவது இைக்கியம் இைக்கியத்தின் கனியாய் இைங்குவது இன்றசாற்கவிலத. எனபவதான் கவிச்சக்கரவர்த்தி கம்ேன் கவிலதலயச் ‘‘றசவிநுகர் கனிகள்’’ எனச் றசப்புகிொன். கவிலத என்னும் கனி உணர்ச்சி என்னும் சாற்ெினால் உருவாகின்ெது. கற்ேலன என்னும் சுலவயுடன் திகழ்கின்ெது. வடிவத்தால் வண்ணமும் வனப்பும் றேறுகின்ெது. உண்ோர்க்கு உவட்டாமல் இனிக்கும் தன்லம உலடயது. என்றும் அழியாத கருத்துக்களாகிய ேயலன நல்கும் இயல்ேிலனக் றகாண்டது. இத்தலகய ‘‘கவிலதக்கனிகள்’’ என்னும் ஒரு நூலை எனதருலம நண்ேர் கவிஞர் இக்குவனம் அவர்கள் றவளியிட இருப்ேது கண்டு களிபேருவலக எய்துகின்பென். கவிஞர் இக்கவனம் அவர்கலள நான் றசன்ெ இருேது ஆண்டுகளாக நன்கு அெிபவன். மைாயாப் ேல்கலைக்கழகத்திற்கு நான் 1969ல் ேணியாற்ெிட வந்த நாள் முதல் இந்த நாள் வலர என் குடும்ே நண்ேராய்த்திகழும் இக்குவனம் அவர்கள் தமிழகத்தில் தமிழாசிரியராகத் தம் றதாழிலைத் றதாடங்கியவர். சிங்லகயில் தமிழ் முரசு, தமிழ் மைர் ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து ஓய்வு றேற்ெவர். இலடக்காைத்தில் இைங்லகயிலும் மைாயா நாட்டிலும் இன்ெமிழ்ப் ேணி ஆற்ெியவர் இப்போது இவர் இப்ேலடப்ேின் வழி ஒரு நூைாசிரியாராகவும் இைங்குகின்ொர். கவிலதயுைகில் றவண்ோ என்ேது யாப்ேிைக்கணக் கட்டுப்ோடு மிக்க ஒன்று. ஆகபவ றவண்ோவில் கவிலத இயற்றுவது என்ேது ஒரு சிைர்க்பக லகவந்த கலையாக இருக்கின்ெது. மபைசியா, சிங்கப்பூர்த் தமிழ் இைக்கிய உைகில் ‘‘றவண்ோக் கவிஞர்’’ எனப் றேயர் றேற்ெ. இக்குவனம் அவர்களின் இரண்டாவது கவிலதத் றதாகுப்பு இந்நூல் “எதுலகயும் பமாலனயும் பவண்டபவ பவண்டாம் சீரும் கீரும் சுத்தச் சனியன்கள் . றவண்ோவும்

  • 8

    கிண்ோவும விருத்தமும் கிருத்தமும் பவண்டாத றதால்லைகள்’’ என்று கருதி ‘‘யாப்ேிைக்கணம்’’ கவிஞர்க்கு ஒரு லகவிைங்கு. அதலன உலடத்றதெிய பவண்டும்’’ என்னும் றகாள்லகயுடன் வெீிட்றடழுகின்ெ கவிஞர்கள். புதுக்கவிலத என்னும் றேயரால் உலரவசீ்சுக்கலள உைவவிட்டுக் றகாண்டிருக்கும் பவலளயில், மரபுக்கவிலதகளிபய இைக்கணக்கட்டுப்ோடு மிக்க றவண்ோ யாப்ேினால் இயற்ெிய கவிலதகலள ஒரு நூைாகத் றதாகுத்து றவளியிடும் இக்குவனம் அவர்களின் முயற்சி ோராட்டுதற்குரிய ஒன்ொகும். கவிஞர் இக்குவனம் அவர்கள் இந்தக் கவிலதக்கனிகளில் ேைவற்லெ இலெவனுக்பக ேலடயல் ஆக ஆக்கித் தம் ேக்தித் திெத்லத றவளிப்ேடுத்துகின்ொர். எனபவ இக்கவிலதகளில் முருகனும் காளியும் ோடுறோருள்களாக நம் கண்முன்பன நின்று களிநடம் புரிகின்ெனர். முருகனிடத்தில் அன்புக் கனிலயக் றகாடுத்து அவன் திருவருட் கனிலயப் றேெ பவண்டுகிொர். கவிஞர். முத்தமிழால் லவதாலரயும் வாழலவக்கும் முருகப்றேருமான் இக்குவனம் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ்க்கனிலய ஏற்று, அருளும் றோருளும் உடனளிப்ோன் என்ேது உறுதி. ‘‘மனிதர்காள்! இங்பக வம் , ஒன்று றசால்லுபகன், கனிதந்தால் கனி உண்ணவும் வல்லீபர , புனிதன் றோற்கழல் ஈசன் எனும் கனி இனிது சாைவும் ஏசற்ெவர்கட்பக” என்ேது நாவுக்கரசர் வாக்கு. எனபவ இந்த இன்ெமிழ்க் கவிலதகளின் வாயிைாக ஈசன் எனும் கனிலயயும் சுலவக்கும் பேறு றேறுகிபொம். இருேதாம் நூற்ொண்டு இைக்கிய உைகிற்கு விடி றவள்ளியாக விளங்கிய ோரதி , தன் வாழ்க்லக வரைாற்றுப் ேகுதிகலளப் ‘‘ோரதி அறுேத்தாறு’’ என்னும் ேகுதியில் ோடுகின்ொன். இவலனப் ேின்ேற்ெி இக்குவனம் தன் வரைாற்ெிலன றவண்ோ யாப்ேினால் இந்நூைில் தந்துள்ளார். ‘‘என்குெிப்பு ’’ உளப்புண்’’ என்னும் இருேகுதிகளும் கவிஞரின் வாழ்க்லக வரைாற்லெப் ோடுறோருளாகக் றகாண்டலவ.

  • 9

    இத்றதாகுப்ேில் மபைசியா நாட்டின் மாண்பு குெித்து ‘நைமார் கனிறகாடுக்கும் நாடு’’ என்னும் ஒரு தலைப்பு உள்ளது. இப்ேகுதியில் உள்ள உண்ணத் திகட்டா உயர் ‘‘றடாரியன்’’ மங்குஸ்தீன்’’ நண்ணுசுலவ ‘ரம்புத்தான் ’ நற்கதைி –வண்ணப் ேைா‘டுக்கு’ ‘‘ேப்ோளி’’ அன்னாசி’ மற்றும் நைமார் கனிறகாடுக்கும் நாடு. மண்லணக் குலடந்திடிபைா வற்ொ வளஞ்சுரந்து கண்லணக் கவரும் கனிவனமாம்-எண்ணரிய எத்துலணபயா ஈயச் சுரங்கங்கள் இந்நாட்ழல் அத்துலணயும் றோன்றனன் ெெி என்னும் றவண்ோக்கள் இக்கவிஞர் ‘கனி’ என்னும் றசால்லை இருறோருளிற் லகயாளும் இயைேிலன எடுத்துலரக்கின்ென. தமிழ்த் தாய்க்கு இவர்தம் ‘கவிலதக்கனிகள்’ என்னும் இந்நூலும் இந்த இரு றோருளில் சுலவயூட்டும் கனியாகவும் வளமூட்டும் கனி(வளம்)யாகவும் விளங்கும் என்று கூெைாம். றோருளியல் பநாக்கில் கூட்டுெவு ேற்ெி விளக்கும் ஏலழயா கூட்டுெவா என்னும் ஓர் அந்தாதியும் இத்றதாகுப்ேில் இடம் றேற்று உள்ளது. இத்தலைப்பு றவறும் ஓர் கவிலதத் தலைப்ோக மட்டுமின்ெித் தமிழர்தம் சிந்தலனலய பநாக்கி விடுத்த வினாவாகவும் விளங்குகிெது. முருகன் காளி என்னும் இலெ ேற்ெியும், கவிஞன் என்னும் ஆன்மா ேற்ெியும், நாடும் றோருளுமாகிய உைகம் ேற்ெியும் கூறும் கவிலதக்கனிகள் என்னும் இந்நூல் இலெ உயிர் தலள என்னும் முப்றோருள் உணர்த்தும் முத்தமிழ்க் கனியாகவும் இைங்குகிெது. வனந்தரும் கவிலதக்கனிகள் தமிழன்லனக்கு மட்டுமன்ெி நமக்கும் வளந்தரும் கவிலதகளாக விளங்குகின்ென. இகவிலதக் கனிகலளத் தமிழுைகம் உண்டு சுலவத்து உறுேயன் றேறுவதற்கு உதவிய கவிஞர் இக்குவனம் அவர்கள் எல்ைா நைமும் றேற்றுப் ேல்ைாண்டு வாழ்ந்து

  • 10

    தமிழன்லனக்குத் தக்க றதாண்டாற்ெிடத் தண்டாயுதோணியின் திருவருலள இந்தத் லதப்பூச நன்னாளில் பவண்டுகின்பென். பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

    ைி. துனரராஜ ீகாைல் சந்ைங்கள்,

    மம, 1992

    மனிதனுக்குரிய ேசி இரண்டு. ஒன்று வயிற்றுப்ேசி மற்றொன்று உணர்வுப்ேசி. உணர்வுப்ேசியின் உந்துதபை காதல். காதல் அலடதல் உைகத்தியற்லக. காதல் என்னும் மூன்றெழுத்தில் உைகத்துயிர்களின் மூச்சியிருக்கும். உைகக் கவிஞர்களின் பேச்சிருக்கும். காதலை அகம் என ஒரு ேிரிவாக்கி இைக்கியத்தின் ோடுறோருளாகக் கண்டு, வலரயலெ றசய்து மகிழ்ந்தது தமிழ் றநஞ்சம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பன வாழ்ந்த றதால்காப்ேியனார் காதலுக்கு இைக்கணம் கண்டார். சங்க இைக்கியப் புைவர்கள், காதலுக்கு இைக்கியம் அளித்தனர். ‘‘மைலரவிட றமன்லமயானது காதல். சிைர்தான் அதன் றசவ்வி உணர முடியும்’’ என்று பேசுகின்ெ றதள்ளுதமிழ் வள்ளுவர் காதைின் சாொக காமத்துப்ோல் கண்டார். இலடக்காைத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் மானிடக் காதலைக் கடவுட் காதைாக மாற்ெி இைக்கியம் இயற்ெினர். திருத்தக்க பதவரும், கம்ேரும் காதலுக்குக் காவியம் ோடினர். இக்காைக்கவிஞர்கபளா இந்தக் காதலுக்கு எழிபைாவியம் தீட்டினர். ‘‘காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல்’’ என்று ோடிய ோரதிக் குயில், ‘‘காதைினால் மானுடர்க்குக் கைவி யுண்டாம் கைவியிபை மானுடர்க்குக் கவலை தீரும்

  • 11

    காதைினால் மானுடர்க்குக் கவிலத உண்டாம் கானமுண்டாம், சிற்ேமுதற் கலைகள் உண்டாம். ஆதைினால் காதல் றசய்வரீ். உைகத் தீபர! அஃதன்பொ இவ்வுைகத் தலைலம இன்ேம் காதைினால் சாகாமல் இருத்தல் கூடும் கவலை போம். அதனாபை மரணம் றோய்யாம்’’ என்று காதைின் புகலழக் கன்னித் தமிழ்ச் பசாலையில் கூவி மகிழ்கின்ெது. இக்காைக் கவிஞர் கவியரசு கண்ணதாசன் காதைில் அன்ேிலனயும், இன்ேத்லதயும், ஆழ்ந்த தத்துவத்லதயும் அனுேவ வாயிைாகக் கண்டு மகிழ்ந்தவர். மானிடக்காதலையும் கடவுட் காதலையும் ோடிக் களித்தவர். இைக்கியக் காதலைக் கல்ைார்க்கும் கற்ொர்க்கும் களிப்ேருளும் களிப்ோக மாற்ெித் திலரப்ேடத்தில் பதனிலசக் கவிலதயாக்கிப் ேரப்ேியவர். ேழங்காைம் முதல் இன்றுவலர ேைரும் ோடி மகிழும் காதலை இந்நூைாசிரியர்” விைாசமில்ைாத வாசமான அனுேவமாகக்” கண்டு வடித்த ேலடப்பே இந்நூைாகும். காதலைப் ேற்ெிய தம் கருத்துக் குவியலை உணர்ச்சி ததும்ேக் கண்ணதாசன் கவிலதபயாடு இலணத்தும், ேைவலகக் கற்ேலனச் சூழலை உருவாக்கியும் இந்நூைாசிரியர் இங்பக தந்துள்ளார். இதலன இந்நூைாசிரியபர காதலைப் ேிலசந்து கண்ணதாசனின் அடங்காத ஆலசகலளயும் உெங்காத நிலனவுகலளயும் அதிபை ஊற்ெித் தங்கக் கிண்ணத்தில் ோசத்லதப் ேரிமாறுவதாகக் கூறுகிொர்.எளிய தமிழ் நலட,இனிய கவிலத ஓட்டம்,அழகிய கற்ேலன, அலமதியான போக்கு, இலடஇலடபய கண்ணதாசன்கவி இன்ேம், தமிழ்ச் றசாற்களின் “இந்திர ஜாைம்” ஆகியலவ இந்த நூைின் தனித்தன்லமகளாகும்.இந்த நூலைப் ேடிக்கும்போது நூைாசிரியரின் தணியாத் தமிழ்க்காதலும், எழுத்தாற்ெலும்,, கெேலனத் திெமும், கவிலத புலனயும் ோங்கும், கண்ணதாசன் கவிலதகலளச் சுலவக்கும் திெனும் ேளிச்சிடுவலதப் ேைரும் உணரைாம். இவர் காணும் காதல்தான் எத்தலன வலக.ஓர் எடுத்துக்காட்டு.

  • 12

    ‘‘ஊலமக்காதல்-காயமாகிவிடுகிெது உவலமக்காதல்-இைக்கியமாகி விடுகிெது ஊடல்காதல்-சரசமாகிவிடுகிெது. உண்லமக்காதல்-நிலைத்துவிடுகிெது. ஊழல்காதல்-ஊசைாடிவிடுகிெது றதய்வகீக் காதல்-பூலஜக்குரியது ஒருதலைக்காதல்-ராகமாகிவிடுகிெது இரட்லடஇலைக் காதல்-ரத்தாகிவிடுகிெது. புதுலமக்காதல்-பூத்துக் குலுங்குகிெது. இந்நூைாசிரியர் துலரராஜ ீ சிங்கப்பூர்த் பதசியப் ேல்கலைக்கழகத்தில் ேடிக்கும் ஓர் இலளஞர். தமிழ் றமாழியின் மீது ேற்றும், தமிழர் நைத்தில் அக்கலெயும் றகாண்டு துடிப்புமிக்க றசயைாற்றும் திென் மிக்கவர். இவரின் முதல் முயற்சியாகத் திகழும் ‘காதல் சந்தங்கள்’ என்னும் இந்நூல் விலரவில் அச்சில் றவளிவர இருப்ேது கண்டு மகிழ்கிபென். இது போன்று இன்னும் ேை இைக்கிய நூல்கலளப் ேலடத்து தமிழன்லனக்கு காணிக்லகயாக்கிப் ேணியாற்றுவார் என்று எதிர்ோர்க்கின்பென். அவருக்கு என் வாழ்த்தும், ோராட்டும் உரியனவாகுக. ‘‘காதல் சந்தங்கள் கவிலதத் தந்தங்கள் அன்ேின் ேந்தங்கள் ேடிக்க முந்துங்கள் கண்ணதாசன் வண்ணத்தமிழிலன எண்ணத்தில் குலழந்து ேண்ணமுது ஊட்டி இைக்கிய முலளயாக இைங்கும் துலரராசன் நைம் ேை றேற்றுத் துைங்குக றதாடர்ந்பத!’’

  • 13

    பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

    ------------------------

    5. மைசிய கல்விக் கைகம் சிறப்புப் பயிற்சித் ைிட்டம் (ைாய் மமாைி) மாணவர்கள்

    கனை அரும்பு 12. 6. 1999

    இைக்கியக் கல்வியில் ேடித்தல், ோராட்டுதல், ேகுத்தாராய்தல், ேலடத்தல் என நான்கு ேடிக்கட்டுகள் உள்ளன. ேடிப்ேவர்க்குத் தீங்கரும்ோக இருந்து இன்ேம் தருவது இைக்கியம் ‘‘நவில்றதாறும் நூல் நயம் போலும் ேயில்றதாறும் ேண்புலடயாளர் றதாடர்பு’’ என்னும் குெள் ோராட்டுவதன் ேயலன வைியுறுத்தும். ‘‘குணம் நாடிக் குற்ெமும் நாடி அவற்றுள் மிலகநாடி மிக்க றகாளல்’’ என்னும் குெள் ேகுத்தாராய்தைின் ேண்லே உணர்த்தும். ‘‘நான் றேற்ெ இன்ேம் றேறுக இவ்லவயகம்’’ என்னும் திருமந்திர நூைின் வரிகள் ேலடப்ேின் ேரந்த பநாக்கத்லதப் ேகரும். இத்தலகய இைக்கியக் கல்வியின் இறுதிக் கட்டமான ேலடத்தைின் இன்ெியலமயாலமலய உணர்ந்து கற்ேித்ததன் ேயனாக அலமந்து நம் கண்முன்பன திகழ்வது தான் ‘சிறுகலதக் கனிகள்’ என்னும் இத்றதாகுப்பு நூைாகும். சிங்கப்பூர் உயர்நிலைப்ேள்ளி இறுதி வகுப்பு முடித்துத் தமிழாசிரியர் ேணிலய பமற்றகாள்ள விரும்ேி முதனிலை ஈராண்டுகளில் நம் பதசிய கல்விக் கழகத்தில் ேயின்ெ, ேயிலும் மாணவர்களுக்கு இைக்கியப் ேலடப்புப் ேயிற்சி கற்ேிக்கப்ேட்டதன் விலளவாக எழுந்த முதல் முயற்சிபய இந்த நூல். தமிழாசிரிய மாணவர்கள் தம் கற்ேலனத் திெம்றகாண்டு எழுதிய சிறுகலதகலளத் றதாகுத்து நூைாக றவளியிடும் முயற்சி பமற்றகாண்ட தமிழாசிரியர் திருவாளர் இராஜிக்கண்ணு அவர்களின் ேணி ோராட்டுக்குரியது. இதனால் விலளயும் ேயன் இரண்டு. ஒன்று , ேலடப்ேிைக்கியம் ேலடக்கத் தமிழாசிரியர்கலளத் தூண்டி

  • 14

    ஊக்கப்ேடுத்துவது.மற்றொன்று சிங்கப்பூர்த் தமிழ்ப் ேலடப்ேிைக்கியத்திற்குச் சிெிதளவாவது ஆக்கம் தருவது. ேலடப்ே இைக்கியத்தில் ‘‘சிறுகலத என்ேது யாரும் சுைேமாகப் புரிந்து றகாள்ளக்கூடிய வடிவம். அதில் சிக்கல்களும், குழப்ேங்களும், இருக்க முடியாது. அதன் இைக்கு பநாக்கிச் றசல்வறதான்பெ சிறுகலதயின் இைக்கணம். சுருங்கச் றசால்ைிச் சுருக்றகன உணர்த்து மாட்சி சிறுகலதக்பக உரித்தான மாட்சி’’ என்கிொர். பகாமகள் என்னும் சிறுகலத ஆசிரியர். எனினும் சிறுகலத எழுதுவது விலளயாயட்டல்ை. சிறுகலத எழுத விரும்புவர்களுக்குப் ேிரேைச் சிறுகலத எழுத்தாளர் ைா. ச. இராமாமிர்தம் ‘‘சிறுகலதபயா றநடுங்கலதபயா எழுத ஆரம்ேித்துவிடு. விஷயம் ேிெகு தன் றவளிப்ோட்டுக்குத் தன் வழிலய எப்ேடிபயனும் ோர்த்துக்றகாள்ளும். தண்ணரீில் முதைில் விழுந்தால்தான் குளிப்ேபதா, மூழ்கிப் போவபதா. நீச்சல் அடிப்ேபதா அலமயும்’ என்று ஆபைாசலன கூறுகிொர். எனபவ இவ்வாறு எழுத ஆரம்ேித்தவர்களின் ேலடப்புகபள இந்நூைில் காணும் சிறுகலதகள் என்ேலத யாரும் மெக்கக்கூடாது. எனினும் இவர்கலளப் ோராட்டி ஊக்கமூட்டித் தமிழ் இைக்கியப் ேலடப்பு தலழக்கச் றசய்வதிலும் தவெக்கூடாது. இதலனச் சிங்லகத் தமிழுைகம் றசய்யும் என்று எதிர்ோர்க்கிபென். இந்நூைில் சிறுகலதகள் எழுதிய தமிழாசிரிய மாணவர்கள் சிறுகலதகலளப் ேலடப்ேதில் சிெந்து நிற்க இன்னும் ேை முயற்சிகலள பமற்றகாள்ள பவண்டும். முதல் முயற்சியாகச் சிெந்த எழுத்தாளர்களின் சிறுகலதகள் ேைவற்லெ ஆழ்ந்து ேடிக்க பவண்டும். அலவ தரும் சுலவகலள அெிந்து உணர்ந்து அனுேவித்துப் ோராட்டத் றதரிந்து றகாள்ளபவண்டும். ேிெகு அவர்களின் ேலடப்புகலள ஒப்ேிட்டு பநாக்கியும் கூறுகலளப் ேகுத்துப் ோர்த்தும் குலெநிலெகலளக் கண்டெியும் திெனாய்வுத் திெம் றேெ பவண்டும். ேிெகு ேலடக்க முயலும் இவர்களின் ேலடப்புகள் காைம் கடந்து நிற்கும் ேலடப்புகளாகச் சிெந்து விளங்கும். இன்று சிங்கப்பூர்க் கல்வித்திட்டத்தில் வைியுறுத்தப்றேறும் ேகுப்ோய்வுச் சிந்தலனத் திெனும் , ேலடப்ோற்ெல் சிந்தலனத் திெனும் மாணவர்களிடம்

  • 15

    வளர வழிவகுக்க பவண்டிய றோறுப்பு ஆசிரியர்களிடபம மிகுதியாகவுள்ளது. எனபவ இத்தலகய சிறுகலதகலள எழுதும் ஆசிரியர்கள் இப்றோறுப்ேிலன நிலெபவற்ெ ஓரளவு தயாராகின்ொர்கள் என்பெ கூெபவண்டும். அதன் அலடயாளத்லத இத்றதாகுப்பு நூைில் காணைாம். கலத பகட்கும் ஆர்வம் குழந்லதகளிடம் அதிகம். எனபவதான் நம் ோட்டிமார்கள் கலதகலளக் கூெி நம் குழந்லதகளிடம் நற்ேண்புகலள வளர்த்தார்கள். குழந்லதகள் மட்டுமின்ெிப் றேரியவர்களும் தான் கலதயில் நாட்டமுலடயவர்களாக உள்ளனர். எனபவதான் நம் சமயச் சான்பொர்களும் சிறுகலதகளின் வாயிைாகபவ சிெந்த தத்துவங்கலள விளக்க முயன்ொர்கள். ேஞ்சதந்திரக் கலதகள், புத்த ஜாதகக் கலதகள், ேகவான் ராமகிருஷ்ணரின் கலதகள், ஏசுநாதரின் நீதி போதலனக் கலதகள் எல்ைாபம கலதகளின் வாயிைாக உயர்ந்த உண்லமகலள உலரக்க உருவாக்கப்ேட்டலவகபள. கல்வி கற்கவரும் குழந்லதகளிடம் கலத வாயிைாகச் றசால்ைப்ேடும் கருத்துகள் பதனில் குலழத்த மருந்றதன அலமந்து அவர்களின் அெிவுக்குத் றதம்புட்டும் . எனபவ தமிழ் ஆசிரியர்களுக்குக் கலதகலளப் ேலடத்துக் கூறும் ஆற்ெல் லகவந்த கலையாக அலமந்துவிட்டால் தமிலழ எளிலமயாகவும், இனிலமயாகவும் கற்ேிக்க வழி ஏற்ேடும். அதனால் மாணவர்களுக்குத் தமிழ் கற்ேது சுலவயாகத் பதான்றும். சுலமயாக இருக்காது. இதன் விலளவாகத் தமிழ்றமாழி நம் சிங்லகக் குடியரசில் என்றும் வாழும் றமாழியாக நின்று இைங்கும். எனபவ இத்றதாகுப்பு நூலைத் தமிழ்மக்கள் வாங்கிப் ேடித்துத் தமிழ்றமாழி வளர்ச்சிக்கும் இைக்கிய வளர்ச்சிக்கும் ஊக்கமும் ஆக்கமும் ஊட்ட பவண்டுகிபென். இத்றதாகுப்பு நூைின் சிறுகலத எழுதிய தமிழ் ஆசிரிய மாணவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

  • 16

    வி. ஆர். பி மாணிக்கம் புைிைப்பயணம்

    2000

    ேயணங்கலள பமற்றகாள்ளும் ேண்பும், அப்ேயண அனுேவங்கலள மற்ெவர்களுடன் ேகிர்ந்துறகாள்ளும் ஆற்ெலும் மனிதனுக்கு மட்டுபம உரியலவ. இத்தலகய மனிதன் பமற்றகாள்ளும் ேயணங்கபளா ேைவலக. அவற்றுள் ஒன்பெ புனிதப் ேயணம். இத்றதாடர் புனிதலன பநாக்கிச் றசல்லும் ேயணம் என்றும் , புனிதப்ேடுத்தும் ேயணம் என்றும் இருவலகப்றோருள் தரும். புனிதம் என்னும் றசால் தூய்லமலய உணர்த்தும். ‘‘புெத்தூய்லம நீரான் அலமயும் அகத்தூய்லம வாய்லமயால் காணப்ேடும்’’ என்னும் வள்ளுவர் குெளுக்பகற்ே வாய்லமயாக உண்லமயாக விளங்கும்-என்றும் உள்றோருளாக இைங்கும்-றோருள் இலெவன் ஒருவபன . எனபவதான் இலெவலனப் புனிதன் என்பெ அலழக்கின்ெனர் நம் அடியவர்கள். இலெவலன பநாக்கிச் றசல்லும் ேயணபம புனிதப் ேயணம். அவன் அருள் என்னும் நீபர நம் அகத்லதயும் புெத்லதயும் ஒருங்பக தூய்லமப்ேடுத்தும், புனிதப்ேடுத்தும். எனபவ தான் தீர்த்தம் என்று அலழத்தனர். இலெவன் குலெவிைா நிலெவுலடயன். ஆதைால் இப்புனிதப் ேயணம் மனக்கவலை தீர்க்கும் மாமருந்து, ேிெவிக் கடலைக் கடக்க உதவும் பதாணி. முன்பனற்ெப் ோலதக்கு இட்டுச் றசல்லும் ஏணி. எனபவதான் திருநாவுக்கரசர் உைகத்தவலர பநாக்கி, மனிதர்காள் இங்பக வம் ஒன்று றசால்லுபகன் கனிதந்தால் கனி உண்ணவும் வல்லீபர புனிதன் றோற்கழல் ஈசன்எனும் கனி இனிது சாைவும் ஏசற்ெவர்கட்பக’’ என்று புனிதப்ேயணம் பமற்றகாள்ளுமாறு அலழக்கிொர். புனிதனாகிய ஈசன் எனும் கனிலயப் றேெ நாம் பமற்றகாள்ளும் ேயணபம புனிதப் ேயணம்.

  • 17

    வாழ்க்லகப் ோலதயில் அலைோயும் மனத்தால் அவதிப்ேடடுப் ேைவலகப் ேயணங்கள் பமற்றகாண்டு திலச மாெிச் றசல்லும் மனிதலனப் புனிதப்ேயணத்தின்ோல் திருப்ேி ஆற்றுப்ேடுத்தும் ஆற்ெலும் ஆண்டவனுக்பக உண்டு. இதலனத்தான் ‘‘அவன் அருளாபை அவன் தாள் வணங்குதல்’’ என அலழக்கிொர் மாணிக்கவாசகர். இவ்வாறு ஆற்றுப்ேடுத்துதலைத் தடுத்தாட்றகாள்ளுதல் என்றும் கூறுவர் ஆன்பொர், இலெவன் மனிதலனத் தடுத்தாட்றகாள்ளும் வழிகள் ேை திெப்ேட்டன. அவற்ெிற்கு அளவில்லை என்ேலதத் திருஞானசம்ேந்தர் ‘‘ஆட்ோைவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் பகட்ோன் புகில் அளவில், கிளக்க பவண்டா’’ என்று கூறுகிொர். திருஞானசம்ேந்தர்க்கு இலெவன் ோலைக் றகாடுத்து ஆட்றகாண்டான். திருநாவுக்கரசர்க்குச் சூலை பநாலயக் றகாடுத்து ஆட்றகாண்டான். சுந்தரர்க்கு ஓலை காட்டித் தடுத்தாண்டான். மாணிக்கவாசகர்க்குக் காலைக் காட்ழ ஆட்றகாண்டான். இந்த அடியார்கலள ஆட்றகாண்ட விதங்கலள அவர்கள் வாக்காபைபய அெியைாம். ‘‘போலதயார் றோற்கிண்ணத்து அடிசில் றோல்ைாது எனத் தாலதயார் முனிவுெத் தான் எலன ஆண்டவன்’’ என்று திருஞானசம்ேந்தரும், ‘‘சூலை தீர்த்து அடிபயலன ஆட்றகாண்டாபர’’ என்று திருநாவுக்கரசரும், ‘‘ஓர் ஆவணத்தால் றவண்றணய்நல்லூரில் லவத்றதன்லன ஆளுங்றகாண்டார்’’ என்று சுந்தரரும் ‘‘நிைந்தன்பமல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி’’ என்று மணிவாசகரும் தங்கலளத் தடுத்தாட் றகாண்ட வலக ேற்ெிக் கூறுவலதக் காணைாம். இவர்கள் பமற்றகாண்ட ேயணங்கள அலனத்தும் புனிதப் ேயணங்கபள. இலவ ஏழாம், எட்டாம் நூற்ொண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த ேயணங்கள். அடியார்கள் வாழ்வில் மட்டுமன்று. சாதாரண மக்கள் வாழ்விலும் இலெவன் ேைலரத தடுத்தாட்றகாண்டு புனிதப் ேயணத்தின்ோல் திருப்புவலத இன்றும் காணைாம் என்ேதற்குத் திருவாளர் மாணிக்கம் எழுதிய புனிதப் ேயணம் என்னும் இந்நூல் சான்று ஆகவுள்ளது. நாத்திக றநெியில் றசன்ெ நூைாசிரியலர இலெவன் விநாயகராக, முருகனாக , ேதிறனட்டாம் ேடிக்கருப்ேராக , இராக்காச்சி அம்மனாகப் ேல்பவறு வடிவங்களில் பதான்ெி அற்புதங்கள் நிகழ்த்தி , அவ்வப் போது

  • 18

    தடுத்தாட்றகாண்ட நிகழ்ச்சிகள் ேை இந்நூைில் இடம்றேற்றுள்ளன. இடுப்பு வைிலயக் றகாடுத்து இலெயருள் இவலரத் தன்ோல் ஈர்த்தவிதம் விந்லதக்குரிய ஒன்று . இவர் வடீ்டுப் ேரணில் என்பொ மலெத்து லவக்கப்ேட்ட இராக்காச்சியம்மன் சிலை றவளிப்ேட்டு இவர் கிராமத்தில் பகாயில் றகாண்ட வரைாறு , இலெவனின் அற்புதங்கள் இன்றும் நிகழும் என்றும் நிகழும் என்ேலத எடுத்துக்காட்டுக்கின்ென. மருத்துவரால் லகவிடப்ேட்ட இவரின் முதுகுவைி இலெயருளால் குணம் றேற்ெ றசய்திலய நாம் ேடிக்கும் போது றமய்சிைிர்க்கிபொம். ‘‘மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா பநாய்தீர்த்தருளவல்ைான்’’ இலெவன் என்னும் திருமுலெ வாக்கு ஒருபோதும் றோய்க்காது என்று துணிகிபொம். நூைாசிரியராகிய மாணிக்கம் தம் வாழ்வில் மட்டுமன்ெித் தம் மலனவி, மகள் வாழ்க்லக நிகழ்ச்சிகளிலும் இலெயருள் நடத்திய அற்புதங்கலளச் சுட்டிக் காட்டியுள்ளார். இராக்காச்சி அம்மன் பகாயில் திருப்ேணி அலுவல்களில் இவர் ஈடுேட்டபோது இலடயிலடபய பதான்ெிய இலடயூறுகளும் அலவ தீர்க்கப்ேட்ட விதமும் இந்நூைில் நன்கு சித்திரிக்கப்ேட்டுள்ளன. இவற்லெப் ேடிக்கும்போது உள்ளம் றநகிழ்கின்ெது. குடமுழுக்கு விழாவிலும் அதற்குப் ேின்னரும் ேைப்ேை அற்புதங்கள் நிகழ்ந்தலதயும் ஆசிரியர் ேடம் ேிடித்துக் காட்டுகிொர். இறுதியில் முருகப்றேருமான் அருட்காட்சியுடன் இந்நூல் முடிந்தாலும் இந்நூைின் இறுதியல் ஆசிரியர் ‘‘நான் ஆத்திக திலசக்குத் திருப்ேப்ேட்படன். அதுதான் இலெவனின் சங்கல்ேம் என்று எண்ணுகிபென். ஓர் ஆத்மாவின் புனிதப்ேயணம் றதாடர்கிெது’’ என்று கூெி அனுேவம் அன்று. எல்ைார் வாழ்விலும் ஏற்ேடக்கூடிய ஒன்று என்று அவரவர் வாழ்வில் ஏற்ேட்ட இலெயருள் நிகழ்ச்சிகலள எண்ணத் தூண்டுகிெது இந்நூல். எண்ணத்லதத் தூண்டுவது தாபன நன்னூல். இந்நூல் எண்ணத்லதத் தூண்டுவதுடன் இலெவலன பவண்டவும் லவக்கிெது. ‘‘புல்ைாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் ேல்விருக மாகிப் ேெலவயாய்ப் ோம்மாகிக் கல்ைாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்ைசுராகி முனிவராய்த் பதவாராய்ச்

  • 19

    றசல்ைாஅ நின்ெ இத்தாவர சங்கமத்துள் எல்ைாப் ேிெப்பும் ேிெந்திலளத்பதன் எம்றேருமான் றமய்பய உன் றோன்னடிகள் கண்டின்று வடீுற்பென்’’ என்ெ மாணிக்கவாசகர் கூறும் ஓர் ஆத்மாவின் புனிதப் ேயணத்லத நிலனவூட்ட உதவும் நல்ை நூல் ஒன்ெிலன எழுதிய திரு வி. ஆர். வி மாணிக்கம் அவர்கலளப் ோராட்டுகிபென். அவர் 15 ஆண்டுகளில் பமற்றகாண்ட புனிதப்ேயணம் அவலரப் புனிதப்ேடுத்தி ஆண்டவனாகிய புனிதலன பநாக்கிச் றசலுத்தியலதக் கண்டு போற்ெி மகிழ்பவாம். புனிதப் ேயணம் பமற்றகாள்வபத மனிதப் ேிெவியின் பநாக்கம் என்ேலத மிதித்து வாழ முற்ேடுபவாம். பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

  • 20

    மு. ைங்கராசன் இன்பத்ைிருநாடு

    2010 நாற்மபாருள் விரிக்கும் நன்னூல் சிங்கப்பூரின் மூத்த தமிழாசிரியரும், ேலடப்ேிைக்கியம் ேலடத்தவருமான திரு. மு. தங்கராசன் அவர்களின் கவிலதத் றதாகுப்ோன இன்ேத்திருநாடு என்னும் நூலைப் ேடித்பதன். ேடித்பதன் என இனித்தது. இந்நூல் தமிழ்கூறும் நல்லுைகில் சிங்கப்பூருக்குள்ள தனித்தன்லமகலள நன்கு விளக்குகிெது. உறுேசியும் ஓவாப் ேிணியும் றசறுேலகயும் பசரா தியல்வது நாடு. என்னும் வள்ளுவரின் றதள்ளுதமிழ் வாக்கிற்பகற்ே இப்லவயகத்தில் இைங்கும் சிங்கப்பூலர, இன்ேத் திருநாடு எனக் கவிஞர் அலழத்திருப்ேது எண்ணி எண்ணி மகிழ்தற்குரியது. இன்ே நாட்டம் என்ேது உைகிலுள்ள ஓரெிவுயிர் முதல் எல்ைா வுயிர்க்கும் றோதுவான ஒன்று. இதலன ஒல்காப் றேரும் புகழ்த் றதால்காப்ேியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னபர எல்ைா உயிர்க்கும் இன்ேம் என்ேது தான் அமர்நது வரூஉம் பமவற்ொகும்(1168) என்று கூறுகிெது. இன்ேம் என்ேது எல்ைா உயிரினங்களுக்கும் தாமாக இயல்ோக விருப்ேத்துடன் றோருந்தி வருவதாகும் என்ேது இந்நூற்ோவின் கருத்தாகும். ஒரு நாட்டிற்கு அணிகைனாக –அழகாக – விளங்கும் ஐந்தினுள் ஒன்ொக இன்ேத்லதச் சுட்டிக் காட்டுகிொர் திருவள்ளுவர்.

  • 21

    ேிணியின்லம றசல்வம் விலளவுஇன்ேம் ஏமம் அணிறயன்ே நாட்டிற்குஇவ் லவந்து(738) என்னும் திருக்குெளில் இடம் றேறும் ஐந்து அணிகளில் றசல்வமும் இன்ேமும் ஆகிய இரண்டும் இன்ேத் திருநாடு என்னும் தலைப்ேில் இடம் றேெக் கண்டு மகிழைாம். திரு என்ேது றசல்வம் தாபன! இந்தத் திருக்குெளுக்கு உலர எழுதிய ேரிபமைழகர். இன்ேம், விலளவு, பவள்வியும் சான்பொரும் உலடலமயானும் நுகர்வன உலடலமயானும் நிைம் நீர்களது தன்லமயானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது என்று விளக்கம் தருகிொர். இந்த விளக்கத்திற்கு எடுத்துக்காட்டு நாடாக இைங்குவது சிங்கப்பூராகும் என்ேலத இந்தக் கவிலத நூல் நன்கு பேசுகிெது. திரு என்னும் றசால்லுக்குச் றசன்லனப் ேல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி, இைக்குமி, றசல்வம், சிெப்பு, அழகு, காந்தி(காந்தத்தன்லம) , றோைிவு, ோக்கியம் , றதய்வத்தன்லம, நல்விலன , மாங்கைியம், ேலழய தலையலண வலக, வறீ்றுத் றதய்வம், பசாதிடன் ஆகிய ேதின்மூன்று றோருள்கலளத் தருகிெது. இவற்றுள் ேத்துப்றோருள்கள் சிங்கப்பூர்த் திரு நாட்டுக்குப் றோருந்தி வரும் சிெப்புகளாகும் என்ேலதயும் இக்கவிலத நூலைப் ேடிப்போர் அெியமுடியும் . எல்ைாவற்ெிற்கும் பமைாகப் பேராசிரியர் என்னும் உலரயாசிரியர் திருக்பகாலவயார் என்னும் நூலுக்கு உலர எழுதும்போது, திரு என்ேதற்குக் கண்டாரால் விரும்ேப்ேடும் றதய்வத்தன்லம எனக் கூறுகிொர். வந்து ோர்ப்ேவர் மனலதத் தன் வனப்ோலும் வளத்தாலும் வசப்ேடுத்தும் ோங்கினது சிங்கப்பூர் என்ேலதயும் இக்கவிலதத் றதாகுப்ேிலனப் ேடிப்போர் எளிதில் உணர்வர். அெம், றோருள், இன்ேம், வடீு அலடதல் நூற்ேயபன என்ேதற்கு ஏற்ே, நாற்றோருள் விரிக்கும் இயல்புலடயதாக இக்கவிலதத் றதாகுப்பும் நாடு, வாழ்த்துக்கள், இலெலம, உணர்வுகள் என்னும் நான்கு ேகுதிகலளக் றகாண்டு விளங்குகிெது. இது நம் நாடு, நீ இதன் நைம் நாடு என்று இக்காை இலளயர்க்கு இதன் வரைாறு, றேருலம, சிெப்பு எல்ைாவற்லெயும் எடுத்துக் கூெி நாட்டுப்ேற்லெ வளர்க்க முயல்கிொர் கவிஞர்.

  • 22

    வாழ்த்த வாயும் நிலனக்க மடறநஞ்சும் தாழ்த்தச் றசன்னியும் தந்த தலைவன் என நாவுக்கரசர் நவின்ெதற்பகற்ே வாழ்த்துலரகள் அலமந்துள்ளன. தக்காரும் தாழ்விைாச் றசல்வரும் பசர்வதுதாபன நாடு என்ேலத உணர்ந்து , நாட்லட வாழ்த்திய ேின்னர் தக்கார்களாகிய தலைவர்கலள அெிஞர்கலள வாழ்த்துகின்ெ வாழ்த்துலரகளும் இந்நூைில் இடம் றேற்றுள்ளன. கவிஞரின் வாழ்த்துப் றேறும் பேறு அடிபயனாகிய எளிபயனுக்கும் வாய்த்திருப்ேது தமிழன்லன தந்த தவப்பேொகும். வாழ்த்து என்ேது தமிழில் ேல்ைாண்டு வாழ்க என ஆசிர்வதித்தல் என்ேலதயும் குெிக்கும். கடவுள் வாழ்த்து என்ேதில் வணக்கம் என்ேலதயும் குெிக்கும். அதுபோை இக்கவிலத இந்நூைில் வாழ்த்து இலெலமலய வணங்கும் நிலையில் மூன்ொவதாக இடம் றேற்றுள்ளது. உணர்வுகளின் ஊர்வைபம கவிலத! உள்ளத் துள்ளது கவிலத-இன்ே உருறவடுப்ேது கவிலத றதள்ளத் றதளிந்த தமிழில்-உண்லம றதரிந்துலரப்ேது கவிலத! என்ேது கவிமணி பதசிக விநாயகம் ேிள்லளயின் கவிலத இைக்கணத்திற்பகற்ே உணர்வுகள் ேற்ெிய கவிலதகள் இறுதியாக இடம் றேற்றுள்ளன. இவ்வாறு தலைப்ோலும் உள்ளடக்கத்தாலும் சிெப்புப் றேற்ெ இக்கவிலத நூலை இயற்ெிய கவிஞர். மு. தங்கராசுன் அவர்கள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்றகல்ைாம் சிெந்த முன் மாதிரியாகத் திகழ்ேவர். தம் மக்கலள எல்ைாம் தமிழாசிரியர்களாக ஆக்கித் தமிழுக்கு வளம் பசர்த்த ன்லமயர். ேணியுமாம் என்றும் றேருலமக்கு இைக்கணமாக இருக்கும் ேண்புலடயவர். கவிலத, சிறுகலத , நாடகம், கட்டுலர எனப் ேல்வலக ேலடப்ேிைக்கியத்லத எழுதித் தமிழன்லமக்கு எழில் பசர்த்த

  • 23

    ஏந்தல். ஏலனய எழுத்தாளர்களுக்கும் நண்ேர்களுக்கும் ஒல்லும் வலகயான் எல்ைாம் ஓயாது உதவும் உயர்ந்த றசயல் வரீர். என் பேரன்ேிற்கும் றேருமதிப்ேிற்கும் உரிய றகழுதலக நண்ேராகிய திரு. மு. தங்கராசன் ேை நன்னூல்கலளத் தமிழுக்குப் ேலடத்துத் தர அருளுமாறு இலெவலன பவண்டுகிபென். பேராசிரியர்.சுே.திண்ணப்ேன், சிங்கப்பூர் பதசிய ேல்கலைக் கழகம், சிங்கப்பூர் .

  • 24

    . கவிஞர் அருண்முல்னை நாத்ைிகன் மவள்வி ஏப்ரல்2004(25-1-2004)

    நாத்திகன் பவள்வி என்னும் தலைப்ேில் சிங்கப்பூர்க் கவிஞர் அருண்முல்லை தம் கவிலதகலளத் றதாகுத்து நூைாக றவளியிட இருப்ேது அெிந்து றேரு மகிழ்ச்சிஅலடந்பதன். இவர் கவிலதகலள அவ்வப்போது தமிழ் முரசு வார இதழ்களில் நான் ேடித்து மகிழ்வது உண்டு. கவிஞர் அருண்முல்லை நற்ெமிழ்ப் ேற்ொளர். நாடு , இனம் முன்பனெ பவண்டும் என்னும் நல் பநாக்கினர். மரபுக் கவிலத இயற்றும் மாண்ேினர். எதுலக, பமாலன மட்டுமன்ெி எழில் நலடயும் கவிலதயில் மரபு மாொமல் இடம் றேெ பவண்டும் என்னும் எண்ணத்தர். ேிெ றமாழிச் றசாற்கலள இயன்ெ வலரயில் தவிர்த்து எழுதும் றேற்ெியர். இத்தலகய பநாக்கும் வாக்கும் போக்கும் இந்நூைிலுள்ள கவிலதகளில் இடம் றேற்ெிருக்கக் காணைாம். நாத்திகன் என்ேவன் கடவுட் றகாள்லகலய மறுப்ேவன், ஆத்திகபனா கடவுட் றகாள்லகலய ஏற்று வாழ்ேவன்’. “ஆத்தம் ஆனார் அயைவர் கூடி , நாத்திகம் பேசி நாத்தழும் பேெினர்’’ என்னும் திருவாசகத்தின் அடிகள் இதலன வைியுறுத்தும். நாத்திகன் ஆத்திகன் ஆகிய றசாற்கள் வடறமாழித் திரிோல் வந்தலவ. பவள்வி என்ேது யாகம், ஓமகுண்டம், பூசலன ஆகியவற்லெ உணர்த்தும் தமிழ்ச்றசால் . இவற்லெ விரும்ோதவன். றவறுப்ேவன் நாத்திகன். இந்நிலையில் இந்நூைின் தலைப்பு நாத்திகன் பவள்வி என முரண் அணியில் அலமந்துள்ளபத என எண்ணத்பதான்றும் இதற்கு விலட கூறுமுகமாக நூைாசிரியர் ‘‘எனக்குக் கடவுள் வள்ளுவபன. அவலன பநாக்கிச் றசய்யும் பவள்விதான் இந்த நாத்திகன் பவள்வியும். என் றதய்வம் வள்ளுவனுக்கு என் அெியாலம, ஆலச, அச்சம், வியப்பு

  • 25

    நான்லகயும் பவள்வித்தீயில் போட்டு வணங்குகிபென். நான் றசய்வதும் . கடவுள் வணக்கம் தான்’’ என்று முன்னுலரயில் எழுதியுள்ளார். ‘‘அவி றசாரிந்து ஆயிரம் பவட்டைின் ஒன்ென் உயிர்றசகுத்து உண்ணாலம நன்று’’ என்று பவள்விலய றவறுத்து ஒதுக்கிய வள